பாதி இரவி லெழுந்தருளிப்
பாவி யேனை
யெழுப்பியருட்
ஜோதி யளித்தென் னுள்ளகத்தே
சூழ்ந்து கலந்து
துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதிநான் பெற்ற
நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ்
வுலகம் பெறுதல்
வேண்டுவனே
இருளை யேஒளி எனமதித் திருந்தேன்
இச்சை யேபெரு
விச்சைஎன் றலைந்தேன்
மருளை யேதரு மனக்குரங் கோடும்
வனமெ லாஞ்சுழன்
றினம்எனத் திரிந்தேன்
பொருளை நாடுநற் புத்திசெய் தறியேன்
பொதுவி லேநடம்
புரிகின்றாய் உன்றன்
அருளை மேவுதற் கென்செயக் கடவேன்
அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே
No comments:
Post a Comment